Categories
தேசிய செய்திகள்

மே-14 முதல் மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |