இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதால் மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநல பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதை ஒரு தனிப்பட்ட விஷயமாக பார்க்கக்கூடாது. மேலும் குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ளவும்.