2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் பிரையன்ட் பூங்காவில் 59-வது ஆண்டு மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டைரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா உள்ளிட்ட பல்வேறு வண்ண ரோஜாக்கள் பூக்க தொடங்கியுள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பூக்களை பார்த்து ரசித்து, தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.