Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி திடீர் குறைப்பு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பிரபல தனியார் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததுள்ளது.

பிரபல ‌ தனியார் வங்கியான Indusland Bank புதிய விதிமுறைகளை ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளது. புதிய விதிகளின்படி சேமிப்பு கணக்கில் 10 லட்ச ரூபாய் இருந்தால் அதற்கு 3.50% வட்டி வழங்கப்படும். இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு 4% வட்டி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து 10 லட்ச ரூபாய்க்கு மேல் அதாவது 1 கோடி ரூபாய் வரையிலான இருப்பு தொகைக்கு 4.50% வட்டி வழங்கப்படும். இந்நிலையில் சேமிப்பு கணக்கிற்கு ஆண்டிற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கி கணக்கில் நேரடியாக வட்டி தொகை  செலுத்தப்படும். அதன்படி டிசம்பர் 31, செப்டம்பர் 30, ஜூன் 30, மார்ச் 31 போன்ற தேதிகளில் வட்டி தொகை செலுத்தப்படும். மேலும் induslnd bank நாடு முழுவதும் 2,103 வங்கிக் கிளைகளும், 2,861 ஏடிஎம்களும் வைத்துள்ளது.

Categories

Tech |