மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு மருதூர் கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்கராஜு அக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ரோஜாவை தங்கராஜ் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும் தான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், வேறு வீட்டிற்கு நீ சென்று விடு என கூறி தங்கராஜ் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் காயமடைந்த ரோஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.