பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் தன்னுடைய மொத்த லாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் மாத ஆண்டுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 51.15 % வளர்ச்சியுடன், 1,875.8 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1,241.1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 26,749.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனமானது ஜனவரி முதல் மார்ச் மாத காலாண்டில் 4.88 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 68,454 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.