Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற மாணவி”… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் அருகே இருக்கும் அம்மாபாளையத்தில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் மகள் நிதர்சனா. நிதர்சனா காட்டூரில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை.

பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த ஆசிரியர்கள் விரைந்து மாணவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாணவியின் பெற்றோர் பல்லடத்தில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் அங்கு பரிசோதித்து பார்த்தபோது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மனைவியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க மகள் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றதாகவும் அங்கு வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து இறந்து போனதாகவும் ஏன் என காரணம் தெரியவில்லை என கூறினார்கள்.

Categories

Tech |