Categories
பல்சுவை

“DO NOT TRY THIS AT HOME” மூக்கிற்கு நேராக நேர்கோடு….. கோழியை மயக்கும் வித்தை….!!

கோழி என்பது  மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப்பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணி பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையை காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில் கோழியை வைத்து பல நாடுகளில் ஏராளமானவர்கள் ஹிப்னாஸிஸ் என்ற ஆராய்ச்சியை செய்துள்ளார்கள்.  என்னவென்றால் கோழியின் முதுகை தரையில் வைத்துப் பிடித்து, பின்னர் கோழியின் மூக்கிற்கு நேராக  ஒரு நேர்கோடு வரைய வேண்டும். அப்போது கோழியானது அசையாமல் அந்த கோட்டிற்கு நேராக படுத்திருக்கும்.இவ்வாறு 30 விநாடியிலிருந்து  அரை மணி நேரத்திற்கும் மேலாக அசையாமல் இருக்கும்.  இது கோழியின் கால் பூச்சிகளுக்கு மருந்துகளை எளிதாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.    

NOTE: இதை வீடுகளில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். ஏனெனில் ஒரு சிலர் கோழிகளை செல்லப்பிராணியாகவும், இறைச்சிக்காகவும், வியாபாரத்திற்காகவும் வளர்க்கிறார்கள். எனவே அதனுடைய பொறுப்புணர்வை உணர்ந்து இதை வீடுகளில் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்படுகின்றது.

Categories

Tech |