சீனாவில் உள்ள மத்திய ஹுனான் மாகாணத்தில் சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் குறைந்தது 39 பேரைக் காணவில்லை. மேலும் அந்த இடிபாடுகளில் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது வரை இடிபாடுகளில் இருந்து 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.