Categories
பல்சுவை

இதுல எப்படி-னே எரியும்…..? பிரபல “கவுண்டமணி – செந்தில் ” கமெடிக்கான பதில் இதோ….!!

காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் இணைந்தால் அங்கு சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்து மக்களை மகிழ்வித்தனர். அதில் மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு காமெடி தான் பெட்ரோமாக்ஸ். இந்த பெட்ரோமாக்ஸ் காமெடியில் கவுண்டமணி பெட்ரோமாக்ஸ் விளக்கை சுத்தம் செய்து கொண்டிருப்பார். அந்த இடத்திற்கு திடீரென செந்தில் வருவார். அவர் கவுண்டமணியை பார்த்து “இது என்னது அண்ணே” என்று கேட்டார். அதற்கு கவுண்டமணி “இதுதாண்டா பெட்ரோமாக்ஸ் விளக்கு. இதன் பெயர்தான் மேண்டில். இதிலிருந்து தான் வெளிச்சம் வரும்” என்று கூறுவார்.

அதற்கு செந்தில் இதுல எப்படி அண்ணே எரியும்” என்று கேட்டு மேண்டிலை பிடுங்கி எடுத்து உடைத்து விடுவார். இதனால் ஆத்திரமடைந்த கவுண்டமணி செந்திலை அடிப்பதற்கு துரத்திக்கொண்டு ஓடுவார். இந்த காமெடியை பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வராமலிருந்தால் ஆச்சரியம்தான். இந்நிலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கில் இருக்கும் மேண்டிலை எடுத்து எரிக்க வேண்டும். அந்த மேண்டில் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகும். பிறகு அந்த சாம்பலில் நெருப்பு படும்போது அது ஜொலிக்க தொடங்கும். இந்த தகவல் நம்மில் பலருக்குத் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டதா.

Categories

Tech |