Categories
பல்சுவை

டைட்டானிக் விபத்தில் தப்பித்த நபர்…. சொந்த நாட்டில் சந்தித்த அவமானங்கள்…. ஏன் தெரியுமா….?

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

டைட்டானிக் கப்பல் என்பது ஒரு ஆடம்பர சொகுசு பயணிகள் கப்பல் ஆகும். இந்த கப்பல் வட அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்டது. இந்த டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு முதன்முதலாக பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சென்றது. இந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நள்ளிரவு நேரத்தில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த ஒரு பனிப்பாறையில் மோதியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த பயணிகளில் 1,500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த 705 பயணிகளில் ஜப்பானைச் சேர்ந்த masabumi Hosono  என்பவரும் உயிர் பிழைத்தார். இவர் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியபோது கப்பல் தூங்கிக்கொண்டிருந்தார். இவரை கப்பலில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் எழுப்பி  அவரிடம் கப்பல் பனிப்பாறையில் மோதிய விவரத்தை கூறி அவரை கப்பலில்  தப்பித்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து Masabumi Hosono கடலில் குதித்து மேல் பகுதிக்கு வந்துள்ளார். இதனையடுத்து படகில் ஏறி கரைக்கு திரும்பினார்.

இவர் தனது சொந்த நாடான ஜப்பானுக்குச் சென்ற போது ஜப்பானிய மக்கள் இவரை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக டைட்டானிக் கப்பலில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றமல் நீ மட்டும் உயிர் பிழைத்து எதற்காக வந்தாய் என அவரை திட்டி அசிங்கபடுத்தியுள்ளனர். மேலும் இவருடைய அரசாங்க வேலையையும் பறித்து விடுகின்றனர். இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்த Masabumi Hosono தன்னுடைய 68-வது வயதில் இறந்துவிடுகிறார்.

இவர் இறந்து சிறிது நாட்கள் கழித்து இவருடைய பேத்தி Masabumi Hosono -வின் டைரியை பப்ளிஸ் செய்தார். அந்த டைரியில் தன்னுடைய அருகில் இருந்த நபர் படகிலிருந்து குதித்ததாகவும், தன்னுடைய அருகில் யாரும் இல்லாத காரணத்தினால் தான் படகில் ஏறி தன்னுடைய குழந்தை மற்றும் மனைவிக்காக வந்ததாகவும் எழுதி இருந்தார். இதைப்பார்த்த பிறகுதான் ஜப்பானிய மக்கள் Masabumi Hosono மன்னித்தனர்.

Categories

Tech |