கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள குருவாயூரை சேர்ந்த ரெஞ்சு ரெஞ்சி என்ற திருநங்கை தத்தெடுத்த திருநங்கை ஹெய்டி சாடியா. இவர் கேரளாவிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார்.
நாட்டின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான இவருக்கும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாட் பகுதியைச் சேர்ந்த அதர்வ் மோகன் என்பவருக்கும் எர்ணாகுளத்தில் நேற்று (ஜனவரி 26) திருமணம் நடைபெற்றது.
அதர்வ் மோகன், திருநங்கை ஜோடியானா சூர்யா மற்றும் இஷான் தம்பதியின் வளர்ப்பு மகனாவார். இத்திருமண விழா எர்ணாகுளம் காரயோகம், ஸ்ரீ சத்தியசாய் ஆதரவற்றோர் இல்ல அறக்கட்டளை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது. இதில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.