Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள்…? முழு விவரம் இதோ…!!!!!

ஏப்ரல் மாதம் முடிவடைந்து, மே மாதம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், மே 2022க்கான விடுமுறைப் பட்டியலை  ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்படி, வரும் மே மாதம் வங்கிகள் 11 நாட்களுக்கு இயங்காது. இதில் தேசிய விடுமுறைகள், மாநில விடுமுறைகள் அடங்கும். மாநில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலம் அல்லது பகுதிக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி,

மே 1 – உழைப்பாளர் தினம் (நாடு முழுவதும் விடுமுறை)

மே 2 – ரம்ஜான் (கேரளத்தில் கொச்சி, திருவனந்தபுரத்தில் மட்டும் விடுமுறை)

மே 3 – ரம்ஜான் (கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதும் விடுமுறை)

மே 8 – ஞாயிறு விடுமுறை

மே 9 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (மேற்கு வங்கத்தில் விடுமுறை)

மே 14 – இரண்டாம் சனி (நாடு முழுவதும் விடுமுறை)

மே 15 – ஞாயிறு விடுமுறை

மே 16 – புத்த பூர்ணிமா (திரிபுரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மூ, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாசலப் பிரதேசம், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் விடுமுறை)

மே 22 – ஞாயிறு விடுமுறை

மே 28 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை

மே 29 – ஞாயிறு விடுமுறை

Categories

Tech |