சிலருக்கு உயரம் குறைவாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தமடைவார்கள். அவ்வளவுதான் நம்முடைய உயரம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உயரத்தை அதிகப்படுத்துவதற்கு மருத்துவ துறையில் ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. ஆனால் அந்த சிகிச்சை முறைக்கு உங்கள் காலை உடைக்க வேண்டியிருக்கும். இந்த சிகிச்சை இரண்டு கால்களிலும் செய்ய வேண்டியிருக்கும்.
பொதுவாக கால்களில் இரண்டு எலும்புகள் இருக்கும். அதில் இருக்கும் சின்ன எலும்பை ட்ரில் பண்ணி அதை உடைத்து விடுவார்கள். அதேபோல் பெரிய எலும்பின் மேல் பகுதியையும் screw போடுவதற்காக trill பண்ணுவார்கள். அதன்பின் பெரிய எலும்பிலும் மேலிருந்து கீழ் வரை ஒரு ஓட்டையை போடுவார்கள்.
அதன்பின் அந்த இடத்தை உடைத்து விட்டு ஒரு மெட்டலை எலும்பிற்கு நடுவில் விட்டு சரியாக பொருந்தி இருக்கிறதா என்று அசைத்து பார்ப்பார்கள்.இதனையடுத்து அந்த மெட்டலை சரியான இடத்தில் வைத்து மேலும் கீழும் screw போட்டு lock பண்ணிவிடுவார்கள். அதன்பின் அந்த மெட்டலை பயன்படுத்துவதற்கு கால்களில் உள்ள எலும்பை சிறிது தூரம் பிரித்து வைத்து விடுவார்கள்.
இந்த இடைவெளி குறைவான உயரத்தை சரி செய்வதற்கு பயன்படுத்தவார்கள். மேலும் கால் ஆடாமல் இருப்பதற்கு மெட்டலை பயன்படுத்துவார்கள். இப்படியே சில மாதங்கள் விட்டோமானால் இந்த இடைவெளியில் புதிதாக எலும்புகள் உருவாக ஆரம்பிக்கும். இதனைதொடர்ந்து எலும்பு உறுதியானதும் இந்த மெட்டலை எடுத்துவிடுவார்கள். அதன்பின் நமக்குத் தேவையான உயரமும் கிடைத்துவிடும்.
பொதுவாக வெளிநாடுகளில் மட்டுமே இந்த மாதிரியான மருத்துவ முறையை மேற்கொள்கிறார்கள். மேலும் நம் நாட்டில் அத்தியாவசிய தேவைக்காக அதாவது விபத்துகள், மூட்டு அறுவை சிகிச்சையின் போது எலும்புகளை வளர வைப்பதற்கும், தேய்ந்த மூட்டுகளை வைத்து கொண்டு நடக்க முடியாமல் இருபவர்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்கிறார்கள்.