கும்பம் ராசி அன்பர்கள்..,!! இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவது ரொம்ப சிறப்பு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இடமாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் வரலாம் அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணிபுரிவோர் மேல் அதிகாரிகள் ஆகியோரிடம் நல்ல பெயர் ஏற்படும். இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும்.
இன்று எந்த ஒரு காரியத்தையும் யோசித்து செய்யுங்கள் அவசரப்பட வேண்டாம். அதுமட்டுமில்லாமல் காரியங்களை நீங்கள் அலட்சியம் செய்ய வேண்டாம். இதில் கொஞ்சம் கவனம் தேவை. மாணவ செல்வங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆசிரியரின் முழு ஒத்துழைப்பு உண்டு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்