இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் சிலி நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் தென்பட்டதால் இதனை இந்தியாவில் காணமுடியவில்லை.
சிலி நாட்டில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 4.08 மணி வரை நீடித்தது. மேலும் அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழ்கின்றது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்ற காரணத்தினால் இந்தியாவில் தெரியாது.