நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் படம் ‘FIR’. இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் முக்கியக் கதாபாத்தரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார்.
கௌதம் மேனன் இதுவரை பல படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்கிறார்.
சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் விஷ்ணு விஷால் ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு நடிக்கும், இந்தப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸரை நடிகர்கள் நிவின் பாலி, கிச்சா சுதீப், ராணா டகுபதி, நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அபுபக்கர் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். காவல் துறை அதிகாரியாக கெளதம் மேனன் நடிக்கிறார். இந்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Happy to launch #FIRteaser ! Best wishes to the entire team!😍https://t.co/wnbCXdkgIm@VVStudioz @TheVishnuVishal @itsmanuanand @mohan_manjima
— Nivin Pauly (@NivinOfficial) January 26, 2020