இந்தியாவில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தல், முறையற்ற டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுக்காமல் இருப்பது ஆகிய குற்றங்களுக்கு அபராதம் (அல்லது) சிறை (அல்லது) இரண்டும் சேர்த்த தண்டனைகள் விதிக்கப்படும். இந்நிலையில் வட கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து ஓராண்டில் மட்டும் ரூபாய் 23.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் வருடம் ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 392 பயணிகளுக்கு ரயில்களில் டிக்கெட் இன்றி (அல்லது) முறையற்ற டிக்கெட் வைத்திருந்ததற்காக கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடகிழக்கு ரயில்வேயின் சி.பி.ஆர்.ஓ. சபியாசச்சி டே கூறியதாவது “ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களை கவனிக்கும் அடிப்படையில் எங்களது நிர்வாகம் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகிறது. இவ்வாறு அபராத வசூல் மற்றும் வழக்குகளை முந்தின வருத்தத்துடன் ஒப்பிடும்போது அபராத வழக்குகளின் எண்ணிக்கையானது 840.83 % அதிகம் ஆகும். ரயில்வேக்கு அபராத தொகையாக கிடைத்த வருவாய் ஆனது 1,028.50 % அதிகம் என கூறியுள்ளார்.