தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவில் 60 மாவட்டம் அமைப்பு ரீதியாக உள்ள நிலையில், இதில் 59 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்களின் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதில் 25 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் யார் மாவட்ட தலைவர் என்று அறிவிக்கப்படவில்லை. மேலும், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக 20 பேரை நியமித்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் முதற்கட்டமாக வெளியாகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக அணி, பிரிவு நிர்வாகிகள், கட்சியின் முக்கியமான பொறுப்புகளான பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களிலும் விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.