ரஷ்யநாட்டின் 40 விமானங்களை சுட்டுவீழ்த்திய உக்ரைனின் விமானியான ஸ்டீபன் தாராபல்கா போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் இறந்துள்ளனர். இதற்கிடையில் விமானி தாராபல்கா(29) ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி புகழ்பெற்றார். 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்ற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் அவர் பெற்றார்.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி அவர் போரில் உயிரிழக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீரதீரச் செயலுக்காக ஆர்டர் ஆப்த கோல்டன் ஸ்டார், உக்ரைனின் நாயகன் ஆகிய விருதுகள் இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைனிய அரசோ, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.