உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் போர் தொடுத்து வருவதால் அந்நாட்டிலிருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்ய நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்ய நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்கில், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மக்களையும் அந்த பகுதிகளை சேர்ந்த மக்களையும் வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைன், தங்கள் நாட்டு மக்களை ஆயிரக்கணக்கில் ரஷ்யா நாடு கடத்தியிருப்பதாக கூறியிருக்கிறது.