Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்கள் மூலமாக நடந்த சம்பவம்…. தனியார் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் பார்சல் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லாரியில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதில் மொத்தம் 7,300 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு லாரி ஓட்டுனரும், நிறுவனத்தின் உரிமையாளருமான மது மற்றும் வேலாயுதம் பிள்ளை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்களுக்கு காசு கொடுத்து வீடு வீடாக சென்று ரேஷன் அரசி வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அதன்பிறகு வாங்கப்பட்ட அரிசியை பார்சல் சர்வீஸ் என்ற பெயரில் போலியான ரசீது தயாரித்து பல இடங்களுக்கு சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |