Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம..!

 ஆனைகட்டி தடாகம் பகுதியையொட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி தடாகம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. புலிகள் அடர்ந்த வனப்பகுதியிலுள்ள நிலையில் அவ்வப்போது சிறுத்தைகள் மலையடிவாரத்தில் ஒட்டியுள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வருவது வழக்கம்.

இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் இல்லாத சூழலில் சோமயம்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த அரியவகை கருஞ்சிறுத்தை கிராம பகுதியை ஒட்டி காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும், அந்தச் சிறுத்தையை வனத் துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சியெடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Categories

Tech |