Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பாடலை நீங்களே காப்பி பண்ணினால் எப்படி…? சிவகார்த்திகேயனை விளாசும் நெட்டிசன்கள்…!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கின்ற  ‘டான்’ படத்தின் ‘பிரைவேட் பார்ட்டி’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகயிருக்கிறது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ரிலீசுக்காக ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி ‘டான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கின்றனர்.

மேலும் பிரியங்கா அருள்மோகன்  நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே  வரவேற்பை பெற்றது. ‘டங்காமாரி ஊதாரி மற்றும் ஆலுமா டோலுமா பாடல்கள் புகழ் ரோகேஷ் எழுதிருந்த “ஜலபுலஜங்கு” பர்ஸ்ட் சிங்கிளை அனிருத் பாடியிருந்தார்.

இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது ‘பிரைவேட் பார்ட்டி என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகியிருக்கிறது.  சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் பாடியுள்ளனர். இந்தப்பாடலைகேட்ட ரசிகர்கள் ஏற்கனவே வெளியான ‘செல்லம்மா’ பாடல் மற்றும் ‘அரபிக்குத்து’ பாடல் போன்றும் உள்ளதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் உங்க பாடலை நீங்களே காப்பி பண்ணால் எப்படி? அரைச்ச மாவையே அரைக்காதீங்க என ‘பிரைவேட் பார்ட்டி’ பாடலை கண்டமேனிக்கு விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். ‘டான்’ படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |