ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 நபர்கள் உயிரிழந்தனர். எனவே, தலிபான்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 30 வீரர்கள் பலியாகினர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வீடு, வழிபாட்டு தளங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.