ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 11 பெண் தொழிலாளர்கள் பாவூர் பகுதி சாலையில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.