சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு என 1,970 பேருக்கு பரவி , 56 பேரை காவு வாங்கியது. இது சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தகவலாகும்.
இந்த கொடிய வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருவதால் ஒத்துமொத்த நாடும் இதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக பெண் செவிலியர் வீடியோ வெளியிட்டது அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
வைரஸ் பாதிப்பு இருப்பதாக முதலில் கண்டறியப்பட்ட வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் செவிவியர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் வீடியோவில் , இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இப்போது கொரோனோ வைரஸ் முதலில் எங்கு கண்டறியப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து பேசுகிறேன். நான் உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். தற்போது வரை சீனாவில் கொரோனோ வைரசுக்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இது அடுத்தடுத்து என 14 பேருக்கு பரவும் கொடிய வைரஸ் தற்போது ஜனவரி 25இல் சீன புத்தாண்டு. நாம் ஒவ்வொரு சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் உணவருந்தி , மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டுமென விரும்புகின்ற போதிலும் தற்போது நாம் மிகவும் அசாதாரண சூழ்நிலையில் உள்ளோம் என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் , இந்த சூழலில் யாரும் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். எந்த கொண்டாட்டங்களிலும் பங்கேற்காதீர்கள். வெளியே சென்று எந்த ஒரு உணவையும் உட்கொள்ள வேண்டாம். ஆண்டுக்கு ஒருமுறை சீன புத்தாண்டை கொண்டாடுவதால் இப்போது நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் அடுத்த ஆண்டு வருகின்ற புத்தாண்டின் போது நீங்கள் உங்கள் குடும்பங்களை சந்திக்க முடியும் , அதை மகிழ்ச்சியாக கொண்டாட முடியும் என அறிவுறுத்தியுள்ளார்.
நோயை கட்டுபடுத்த நம்முடைய அரசு என்ன செய்கின்றது என்று எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் மருத்துவமனையில் முகமூடி, முகக்கண்ணாடி, துணிகள் குறைவாக உள்ளது. அதே போல வுகான் மாகாணத்துக்கும் தேவை அதிகமாக இருக்கின்றது. எனவே சமூக வலைதளம் நான் கூறுவது அனைவரும் முகமூடி, முகக்கண்ணாடி, துணிகளை நன்கொடையாக வழங்குங்கள். நமக்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது.இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர்கள் இந்த வைரஸ்ஸை மேலும் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் மீண்டும் சொல்கிறேன் சீன புத்தாண்டை கொண்டாட வேண்டுமென மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். என் குடும்பம் , அம்மா , அப்பா நல்லா வாழ வேண்டுமென்று இங்கே கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக பகிருங்கள். இங்கு நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வைரஸ் நோய் பாதிப்பு குறித்த தகவலை சீன அரசாங்கம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.
இந்த கொரோனோ வைரஸ் தற்போது இரண்டாம் நிலைக்கு வளர்ந்து விட்டதை தெரிந்து கொள்ள வேண்டும் . முதல் நிலையில் இதன் தாக்குதல் அறிகுறிகள் இருக்கும் போதே குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலை மிகவும் கொடூரமானது மோசமானது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து சுற்றி இருக்கும் 10 பேரையாவது இந்த கொடூர வைரஸ் பாதிக்கும். எனவே ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே உணவுகளையும் சாப்பிடாதீர்கள் என்று செவிலியர் தெரிவித்துள்ளது ஒட்டு மொத்த சீன மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
https://youtu.be/h8aloXm2NB0