Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை…. 100-வது நாளாக நடைபெற்ற போராட்டம்…!!!!

கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி விக்கிரவாண்டியில் நேற்று 100வது நாளாக போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவை சார்பாக கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் பூரிகுடிசையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டமானது நேற்று 100 ஆவது நாளாக நீடித்தன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்க, சங்கத் தலைவர் சிவக்குமார் வரவேற்க, சட்ட ஆலோசகர் வக்கில் ஐயப்பன், தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத் தலைவர் ஜெயசீலன், வேலு, கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் பார்த்தசாரதி, செல்வம், பாண்டியன், பாரதிகண்ணன், செல்வராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

Categories

Tech |