Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரயில் பயணத்தின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள்”…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!!

ரயில் பயணம் செய்யும்பொழுது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் இருக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ்காரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ரயிலில் பயணிக்கும் பொழுது செல்பி எடுப்பது, செல்போன் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அவர்கள் பறை இசைத்து நடனத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் ஏகே பிரீத் பங்கேற்றார்.

Categories

Tech |