லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இத் திரைப்படமானது ஜூன் மாதம் வெளியாக உள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதையடுத்து கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி படங்கள் ஆக்கினார். தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல் இளமையாக காண்பிப்பதற்காக புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு, அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து அந்த பத்து நிமிடம் பிளாஷ்பேக் காட்சியில் பிரபல கன்னட நடிகையான ஷவானி ஸ்ரீவத்ஸவா நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அவருடைய கதாபாத்திரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து இருப்பதாக கூறுகின்றார்கள்.