மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வருகின்ற 10-ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 10-ஆம் தேதிக்கு பிறகு காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமது மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் 30 நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 12 ஆயிரம் கிலோ குட்கா, 49 கிலோ கஞ்சா போன்ற பொருட்களை பதுக்கி வைத்திருந்த 110 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறும். மேலும் இந்த நாட்டு துப்பாக்கிகளை தயாரிப்பவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சட்டவிரோதமாக யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் உடனடியாக தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.