குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26 ஆம் தேதி (நேற்று) மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பிரத்யேகமாக உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை வெறும் ரூ.10-க்கு வழங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உணவகங்களில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மலிவு விலை மதிய உணவு அனைவருக்கும் கிடைக்கும். மேலும் இந்த உணவகங்களில் தினந்தோறும் குறைந்தபட்சம் 500 பேருக்காவது உணவு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.