வெர்மான்ட் பல்கலை, டஃப்ட் பல்கலை, ஹார்வார்டு பல்கலையின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் போன்றவற்றின் விஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்து முற்றிலும் புதிய வகையான உயிரியல் மறுஉற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கின்றனர். இம்முறையைப் பயன்படுத்தி முதன் முறையாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளனர். அது குறித்த சில சுவாரசியமான அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
# தவளை செல்களிலிருந்து ஜெனோபோட் என அழைக்கப்படும் உயிர் உள்ள ரோபோட்டுகளை உருவாக்கி 2020-ல் அறிவித்த விஞ்ஞானிகள் குழுதான், தற்போது இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கி இருக்கிறது.
# இவ்வாறு இனப் பெருக்கம் செய்யக்கூடிய ரோபோட்டுகளானது கணினிஉதவியின் மூலம் உருவாக்கப்பட்டு, பின் பொருத்தப்பட்டவை ஆகும்.
# சிறு தட்டு ஒன்றில் நீந்திச்சென்று நூற்றுக்கு மேற்பட்ட தனித்தனி செல்களை ஒன்று திரட்டி தங்களது வாய்ப்பகுதியில் புது குழந்தை ரோபோட்டுகளை இவை உருவாக்குகிறது.
# இந்த குழந்தை ரோபோட்டுகளானது சில தினங்களில் வெளியே வந்து தாய் ஜெனோபோட்டுகள் போன்றே நகர மற்றும் செயல்பட தொடங்குகிறது.
# தவளையின் கருவிலுள்ள ஸ்டெம்செல்லை எடுத்து, இதனை முதன் முதலில் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
# அதாவது தடுப்பூசி மாதிரிகளை உருவாக்க மற்றும் சேதமடைந்த மனித உயிரணுக்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தவே முதலில் விஞ்ஞானிகள் உயிர் உள்ள ரோபோட்டுகளை உருவாக்கினார்கள்.
# ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் உள்ள ஜெனோபோட்டுகள் தாமாக நீந்திச்செல்லவும், நகரவும், தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளவும் கூடியதாக இருந்தது.
# தற்போது புது கண்டுபிடிப்பில் இந்த ஜெனோபோட்டுகள் இனப்பெருக்கம் செய்யக்கூடியவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# தவளையின் ஜெனோம் இந்த ஜெனோபோட்டுகளில் இருப்பினும் இவை தலைப்பிரட்டையாக மாறாது. தவளை இனப்பெருக்கம் செய்வது போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இவை இனப்பெருக்கம் செய்கிறது. இதுவரையிலும் அறிவியல் அறிந்த எந்த விலங்குகளோ, தாவரங்களோ இப்படி இனப்பெருக்கம் செய்வது இல்லை என்று ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளர் சாம் கிரீக்மேன் கூறுகிறார்.
# முதலாவதாக உருவாக்கப்படும் தாய் ஜெனோபோட் 3 ஆயிரம் செல்களால் உருவானது குறிப்பிடத்தக்கது.