அக்ஷய திருதியை பண்டிகைக்கு நீங்கள் நகை வாங்கப் போகிறீர்கள் என்றால் கட்டாயம் இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
மே 3ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று. இந்த நாள் செல்வமும், வளமும் கொண்டுவரும் என்பது அனைவரின் நம்பிக்கை. மேலும் அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவார்கள். ஏனெனில் அட்சய திருதியை நாளில் எதை வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவது போன்ற நல்ல காரியங்கள் இந்த நாளில் தொடங்குவார்கள்.
மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பலரும் தங்கம் வாங்க திட்டமிட்டு இருப்பார்கள். ஏனெனில் தங்கம் ஒரு சிறந்த முதலீடு. நீங்களும் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால் தங்கத்துக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தங்கம் வாங்கும் போது மூன்று சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். எனினும் நீங்கள் தங்க நகை வாங்கிய பின் அதனை விற்பனை செய்வதற்கு வேறு வரி உள்ளது.
நீங்கள் தங்கம் வாங்கி அதை மூன்று ஆண்டுகள் வைத்திருந்து அதன் பின்னர் அதனை விற்பனை செய்தால் 20 சதவீதம் வரி விதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் வரித் தொகையில் 4% கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகள் தங்கத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானம் உங்களது வருமானவரிக் கணக்கில் சேர்க்கப்பட்டு நீங்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டியிருக்கும்.