Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில் உக்ரைன் பயணம்…. பிரபல நடிகையின் செயல்…. வெளியான புகைப்படம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே 67வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா. அகதிகளுக்கான முகமையின் தூதரும், பிரபல அமெரிக்க நடிகையுமான ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனின் லிவிவ் நகர வீதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஏஞ்சலினா பார்வையிட்டுள்ளார். மேலும் உக்ரைன்-ரஷ்யா போரால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் ஏஞ்சலினா ஜோலி மருத்துவமனைக்கு சென்று வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்துள்ள குழந்தைகளை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து லிவிவ் நகரில் அமைந்துள்ள ஒரு சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஏஞ்சலினா ஆட்டோகிராப் வழங்கியது, தன்னார்வலர்களுடன் கலந்துரையாடியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |