Categories
பல்சுவை

அப்படியா….! தமிழ் சினிமாவில் அறிமுகமான தொழில்நுட்பங்கள்….. இதெல்லாம் இவரு அப்பயே கொண்டு வந்துட்டாராம்?…..!!!!

தமிழ் சினிமா நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது .அதில் டெக்னாலஜி மிக முக்கிய பங்களிக்கிறது. டெக்னாலஜியை மையமாகக் கொண்டுதான் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது பாகுபலி, கேஜிஎப் என பிரம்மண்டமாக எடுக்கப்படும் பிறமொழி தமிழ் படங்கள், ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த டெக்னாலஜியை பார்த்து நாம் வியந்து வருகிறோம். இப்படி எல்லாம் டெக்னாலஜி உள்ளதா? என்பதை பார்த்து நாம் ஆச்சரியம் அடைந்து வருகிறோம். தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமா துறையிலேயே பல புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்தது டாக்டர் கமலஹாசன் தான். டெக்னாலஜி மீது அளவு கடந்த பிரியம் உள்ள காரணத்தினால் தனது படங்கள் அனைத்திலும் புதிய புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்துவதில் வல்லவர். அப்படி கமலஹாசன் அறிமுகம் செய்த டெக்னாலஜியை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இதில் முதலாவதாக இடம் பெறுவது விருமாண்டி (2004) இந்த படத்தில் பாடல்களில் நேரடி ஒலியை பயன்படுத்தியிருப்பார்கள். இதற்காக nuendo machine டெக்னாலஜியை பயன்படுத்தி இதனை செய்துள்ளனர். அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தேவர் மகன் (1992), இந்தப்படத்தில் திரைக்கதை எழுதும் மென்பொருள் டெக்னாலஜியை இந்த படத்தில்தான் முதன் முறையாக அறிமுகம் செய்தனர். மூன்றாவது இடத்தில் குருதிப்புனல் (1995) டால்பி ஸ்டீரியோ சரவுண்ட் என்று டெக்னாலஜியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது இந்த படத்தில்தான். இந்த படம் அப்பொழுது அதிக சாதனையை படைத்தது.

அதை தொடர்ந்து நான்காவது இடத்தில் விஸ்வரூபம் (2013) இந்த படத்தில் ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜி பயன்படுத்தியுள்ளனர். ஐந்தாவது இடத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் (2005) டிஜிட்டல் முறையை பயன்படுத்தி முதன்முதலில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்தப் படம்தான். ஆறாவது இடத்தில் விக்ரம் (1986), இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கணினியில் பதிவு செய்து செயல்முறை படுத்தியது இந்தப் படத்தில்தான். தற்போது அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளதால் பல்வேறு புதிய புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கிட்டத்தட்ட 1986-களிலிருந்து தங்களது படத்தில் புதிய டெக்னாலஜியை புகுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை தேடி தேடி செய்தவர் கமலஹாசன். திரைப்பட உலகில் டெக்னாலஜியை புகுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய பெருமை கமல்ஹாசனே சாரும்.

Categories

Tech |