ரஷ்ய பிரதமராக 18 வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விளாடிமிர் புதின். உலக வரலாற்றில் உலக அரசியலில், ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அன்று யாரும் கருதி இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்க நபர். தற்காப்பு கலை, ஐஸ்ஹாக்கி, பனிச்சறுக்கு, விலங்குகள் பாதுகாப்பு, தற்காப்பு கலைகள் என்று அனைத்தையும் தனது வாழ்வில் கற்றுக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ போல வாழ்ந்து வருகிறார். ரஷ்யா உக்ரேன் போருக்கு பிறகு இவர் தற்போது மேலும் பிரபலம் அடைந்துள்ளார். பிரபலங்கள் அனைவருக்கும் ஒரு சில பழக்க வழக்கங்கள் இருக்கும். நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.
இப்படி ரஷ்ய பிரதமர் புதின் நடந்து வரும்பொழுது நீங்கள் இதை கவனித்து உள்ளீர்களா? அதாவது அவரது இடது கை மட்டும் வீசி வீசி நடப்பார். ஆனால் வலது கை அசையாமல் இருக்கும் இதை பார்த்த ஒரு சிலர்கள் இவருக்கு ஏதோ வினோதமான நோய் உள்ளது என்று தவறான செய்திகளை பரப்ப தொடங்கினார். ஆனால் 2015ஆம் ஆண்டு ரஷ்யா பத்திரிகையாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டு அதில் புதின் இந்த விதமாக நடப்பது துப்பாக்கி சூடுபவர்கள் நடப்பது போல் உள்ளது என்று அறிவித்தனர்.
இவருக்கு எப்படி ஒரு துப்பாக்கி சூடுபவர்களின் வாக்கிங் ஸ்டைல் இருக்கும் என்று பார்க்கும் போதுதான் இவர் கேஜிபி / எஃப்எஸ்-ன் சாம்போ தற்காப்புக் கலை பயின்று உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது ரஷ்யாவின் ஒரு தற்காப்பு கலைஎனப்படுகிறது. மேலும், கடந்த 2012ல் ஜூடோ எனப்படும் தற்காப்பு கலையின் உயர்ரக கிரேடானா எட்டாவது டான் தகுதியை இவர் பெற்றுள்ளார். சர்வதேச ஜூடோ பெடரேஷன் இந்த தகுதியை இவருக்கு வழங்கியுள்ளது. மேலும் சோவியத் யூனியனின் கேஜிபி -யில் உளவாளியாக வேலைபார்த்து பின்னர்தான் பிரதமராக மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.