Categories
Uncategorized

இனி இந்த சாலை….. “கலைஞர் சாலை” அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பிறகே நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவு தூணை திறந்துவைத்தார். குமரியில் திருவள்ளுவர் சாலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். விழாவில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய நெடுஞ்சாலை துறைக்கு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். தரமான சாலைகளை அமைப்பதே தமிழக அரசின் இலக்கு.நாட்டிலேயே தரமான மேம்பாலம் ஆக அண்ணா மேம்பாலம் திகழ்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி”முத்தமிழறிஞர் கலைஞர் சாலை” என அழைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சென்னை பத்மாவதி நகரில் நடிகர் விவேக் வசித்த பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |