பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரும்போது எப்போதும் கீரி தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா…? பாம்பின் விஷம் கீரிப்பிள்ளையை தாக்கவில்லையா? அல்லது கீரிப்பிள்ளை ஜெயிப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? பாம்பு கீரிப்பிள்ளையை தாக்கும்போது அதிலிருந்து தப்பிக்க கீரிப்பிள்ளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் பாம்பினுடைய விஷம் கீரிப்பிள்ளையின் உடம்பில் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
இதனையும் மீறி பாம்பின் விஷம் கீரிப்பிள்ளையின் உடம்பில் சென்றாலும் அதனை எதிர்த்துப் போராடுவதற்கு கீரிப்பிள்ளையின் உடம்பில் acetylcholine என்ற receptons இருக்கிறது. அதனால் பாம்பு கீரிப்பிள்ளையை இரண்டு அல்லது மூன்று முறை கொத்தினாலும் கூட எந்த ஒரு பிரச்சனையும் வரப் போவதில்லை. ஆனால் கீரிப்பிள்ளை தான் வாங்கும் மூன்றே கொத்திற்குள் பாம்பை கொன்று விடுகிறது. இப்படிதான் கீரிப்பிள்ளை இந்த சண்டையில் ஜெயிக்கிறது.