Categories
தேசிய செய்திகள்

இப்படிப்பட்ட மாமனிதரா?…. சொந்த செலவில் 3000 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…. குவியும் பாராட்டு…..!!!

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெண்ணின் தந்தை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பெண்ணுக்கு நல்ல குணத்துடன் மாப்பிள்ளை பார்ப்பது, சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கும். இதையெல்லாம் பார்த்து தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஒரு தந்தைக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால் ஒருவர் 3000 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் சொந்த அப்பாவாக இல்லை என்றாலும்,அப்பா இருக்க வேண்டிய இடத்தில் இருந்து மிகவும் ஆடம்பரமாக அனைத்து பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இவருடைய பெயர் மலேஷ் அம்பானி. இவர் குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து தந்தை இல்லாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தந்தை இல்லாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்கு தந்தையாக இருந்து தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்கிறார். இவரை அனாதை பெண்களின் தந்தை என்று தான் அனைவரும் அழைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை பலரும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |