இந்த உலகம் உருண்டை என்கிற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த உலகத்தோட மையப்பகுதி எது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய புனித தலமான மெக்காவை தான் உலகத்தின் மையம் என்று கூறுகிறார்கள். அவர்கள் தொழும் போது மெக்காவை நோக்கி தான் தொழுகை இருக்கும். இது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவிலுள்ள டல்சா என்கிற மாகாணத்தில் ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தின் பெயர் center of the universe. அப்படி என்றால் இதுதான் உலகத்தின் மையமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த இடத்தை பார்க்கும் போது ரொம்பவே சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இருக்கிற ஒரு சிறிய வட்டத்தில் தான் ஒரு பெரிய சுவாரஸ்சியம் ஒளிந்திருக்கிறது.அதாவது, அந்த வட்டத்தில் நின்று நீங்கள் பேசினால் அது பக்கத்தில் உள்ளவர்களுக்கு கேட்காது. நீங்கள் சத்தம் போட்டு கத்தினாலும் கூட அது மறுபடியும் உங்களுக்கு தான் எக்கோ அடிக்குமே தவிர உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்காது. இப்படி ஒரு விசித்திரமான விஷயம் உலகத்தில் வேறு எங்கும் நடக்காததினால் இந்த இடத்திற்கு center of the universe என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.