தேசிய அளவில் அதிரடியாக அரசியல் கருத்துகளை தெரிவித்து வரக்கூடிய நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இதுகுறித்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது “சமீபத்தில் நடந்த சட்டசபைத்தேர்தலில் மகராஜ் யோகி ஆதித்யநாத் மகத்தான வெற்றி பெற்ற பின் அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆகவே இது ஒரு அற்புதமான மாலை ஆகும்.
மகாராஜ்-ன் கருணை, அக்கறை மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு போன்றவை என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துவதிலிருந்து நிறுத்தவில்லை. அதனை நான் கௌரவமாகவும், ஊக்கமாகவும் உணர்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் “ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த யோகி அரசானது திட்டமிட்டு இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு ஊக்கமளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் விளம்பரம்தூதராக கங்கனா ரனாவத் இருப்பார் என்று சென்ற வருடம் அறிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.