மாற்றுத்திறனாளியான` ஒருவர் கிரிக்கெட்டில் சாதித்த ஒரு சுவாரசியமான தகவலை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம் .
ஜம்மு காஷ்மீரில் ஆமீர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கைகளையும் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக ஆமீர் உசேன் தன்னுடைய கால்களால் கிரிக்கெட் பயிற்சி செய்துள்ளார்.
இவருடைய விடா முயற்சியின் காரணமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரு ஸ்டேட் கிரிக்கெட் டீம்க்கு ஆமீர் உசேன் கேப்டனாக இருக்கிறார். இவரை லட்சத்தில் அல்ல கோடியில் ஒருவர் என்றே கூற வேண்டும். மேலும் நம் உடம்பில் இருக்கும் குறைகளை நினைத்து வருத்தப்படாமல் நம்முடைய இலக்கினை கடின உழைப்பின் மூலம் சாதிக்க முடியும் என்பது ஆமீர் உசேன் பார்க்கும் போதுதான் தெரிகிறது.