Categories
தேசிய செய்திகள்

“யாரையும் தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது”…. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!!

தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்து வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் ஒரு ஆயுதமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என பல்வேறு மாநிலங்கள் அரசாணை வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொதுயிடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் “எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் அரசியல் சாசனப் பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொதுயிடங்களுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |