Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் தேவைகளை கூற… கட்டணமில்லா தொலைபேசி, “வாட்ஸ்அப்” எண்…. மாநகராட்சி மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

பொதுமக்களின் தேவைகளை கூற கட்டணமில்லா தொலைபேசி, “வாட்ஸ்அப்” எண்ணை தாம்பரம் மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, குப்பைகளை அகற்றுவது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

அப்போது மேயர் வசந்தகுமாரி கூறியதாவது, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் மிக சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்கள் தங்களின் தேவைகளை கூற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் – 1800 425 4355, “வாட்ஸ்அப்” எண் – 8438353355, [email protected] என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

Categories

Tech |