வணிக நிறுவனத்தில் வாங்கிய பொருளைக் கொண்டு செல்ல கேரி பேக் கொடுத்துவிட்டு அதற்கு தனியாக பணம் வசூல் செய்த நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
மும்பையில் ஹேண்ட் பேக் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தில் பேக்கை வாங்கி செல்பவர்களுக்கு கேரி பேக் தருவதற்கு வாடிக்கையாளரிடம் ரூபாய் 20 வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் அந்நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஹேண்ட் பேக் நிறுவனத்தின் மீது ₹13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் லோகோ புகைப்படத்துடன் கேரி பேக் வழங்கும் போது கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.