கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோக்களை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர். இதனையத்து அவர்கள் கோக்களை எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் கல்குவாரி பிரச்சனைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் அப்பன்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.