Categories
உலக செய்திகள்

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைமை பதவியில்…. இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்….!!!

அமெரிக்க நாட்டில் முதல் தடவையாக மத்திய புலனாய்வு அமைப்பினுடைய தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் சிறந்த புலனாய்வு அமைப்பாக அமெரிக்க நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு விளங்குகிறது. இந்நிலையில் தற்போது அந்த அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவினுடைய முதன்மை பதவியில் இந்திய வம்சாவளியினரான நந்த் முல்சந்தனி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக கருதப்படுகிறது.

சிஐஏ, ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, 25 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் கொண்ட நந்த் முல்சந்தனி, சிஐஏ-ன் பணிகளையும், திட்டங்களையும் மேலும் முன்னேற்றுவதற்குரிய அதிநவீன கண்டுபிடிப்புகளை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவார் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதுகுறித்து நந்த் முல்சந்தனி தெரிவித்ததாவது, இந்த பதவியில் சிஐஏ-வில் இணைவது பெருமையாக இருக்கிறது. சிஐஏ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்களுடனும், டொமைன் நிபுணர்களுடனும் சேர்ந்து பணிபுரிவதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |