ஜெர்மன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு நீதிமன்றம் வரி ஏய்ப்பு புகார் குறித்த வழக்கில் இரண்டரை வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
ஜெர்மன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர் மீது கடந்த 2002 ஆம் வருடத்தில் வரி ஏய்ப்பு புகாரில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே அவருக்கு நீதிமன்றம் இரண்டு வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்பிறகு அந்த தண்டனையை நிறுத்தி வைத்தனர்.
தற்போது அவர் லண்டனில் இருக்கும் நிலையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் தான் திவாலானதாக தெரிவித்திருந்தார். மேலும், இவர் சொத்துக்களை மறைத்து ஏமாற்றி கொண்டிருப்பதாக 20 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு இங்கிலாந்து நாட்டின் சவுத் வார்க் கிரவுண்ட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டரை வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திவால் வழக்கு என்று கூறப்பட்டிருப்பதால் இவரது ஆயுள் தண்டனை காலத்தில் பாதி தான் சிறையில் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.