Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நான் தான் கொலை செய்தேன்” மனைவிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை ஈ.பி.பி நகரில் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்க்கும் சுரேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் சாந்தி கள்ளக்காதலை கைவிடாததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தி கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாந்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாந்தியின் கணவர் சுரேஷ், கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் சுரேஷ் தனது மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாந்தியின் பெயரில் சுரேஷ் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். அதன்பிறகு கடன் பிரச்சனை காரணமாக அந்த வீட்டை விற்பதற்கு சுரேஷ் முடிவு செய்தார். இந்நிலையில் வீட்டை விற்கும் பணத்தில் தனக்கு ஒரு பங்கு தரவேண்டும் என சாந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுரேஷ் சாந்தியின் கழுத்தை அயர்ன் பாக்ஸ் கயிறால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |